Munthiri Kaadu: காதலை வைத்து சாதியை ஒழிக்க முடியுமா? விடையளிக்கிறது முந்திரிக்காடு திரைப்படம்!
பல புதுமுகங்களை வைத்து, இயக்குநர் மு. களஞ்சியம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம், முந்திரிக்காடு. ஆணவக்கொலைகள் பற்றியும், சாதி வெறி பற்றியும் பேசும் இப்படம் இறுதியில் சொல்ல வரும் கருத்துதான் என்ன?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாதலுக்கு எதிரி சாதின்னா..அந்த சாதிக்கு எதிரி காதல்தான்டா.. என்ற பஞ்ச் வசனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான், முந்திரிக்காடு.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில், சாதி மாற்றி காதலிக்கும் ஜோடிகளை தேடித்தேடி வெட்டிக் கொலை செய்கிறது, அவ்வூரில் உள்ள சாதிய வெறிபிடித்த கும்பல்.
அந்த கிராமத்தில், IAS கனவுடன் வாழும் உயர் சாதியை சேர்ந்த 'தெய்வம்' என்ற பெண்ணிற்கும், போலீஸ் கனவுடன் வாழும் கீழ் சாதி இளைஞன் செல்வாவிற்கும் இல்லாத காதலை இருக்கு எனக்கூறி சம்பந்தப்பட்டவர்களை சாதி பெருமை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர்,சாதியவாதிகள்
ஒரு கட்டத்தில், தெய்வத்திற்கும் செல்லாவிற்கும் உண்மையிலேயே காதல் வந்து விடுகிறது. ஒரு கட்டத்தில், நாயகியை ஊருக்கு நடுவில் வைத்து முடியை அறுத்து மானபங்கம் செய்கின்றனர். இவ்வளவையும் தாண்டி, தெய்வம், செல்லாதான் வேண்டும் என ஒற்றை காலில் நிற்க, அவளை கொல்ல வேண்டும் என அப்பெண்ணின் சாதியை சேர்ந்தவர்கள் முடிவெடுக்கின்றனர். இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் கதை.
வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள், சாதியின் பெயரால் கொடூரமாக கொல்லப்படுவதையும் படித்த பல இளைஞர்களே இது போன்ற சாதி வெறி பிடித்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் யதார்த்தத்துடன் காட்டியிருக்கும் இயக்குநருக்கு பாராட்டுகள்.
காதல்தான் சாதியை ஒழிக்க இருக்கும் ஒரே ஆயுதம்.. என இவர்கள் கூற வரும் கருத்தினை ஏற்றுக்கொள்ள சற்று நெருடலாகத்தான் உள்ளது. கிராமப் புறங்களில் சாதி வெறிபிடித்து இருப்போரை நகரத்துக்கு வாங்க டா..அங்க இருந்துட்டு சாதியப் பத்தி நினைக்காம செத்துப்போங்க டா.. எனக்கூறுவது ஏற்புடையதாக இல்லை.
மொத்தத்தில், சொல்ல வந்த கருத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சுருங்கச் சொல்லியிருந்தால், கண்டிப்பாக முந்திரிக்காடு படம், பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -