Parunthaaguthu Oorkuruvi: ஊர் குருவி பருந்தானதா..இல்லையா? ‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் திரை விமர்சனம்!
பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல், பல படங்களில் துணை கதாப்பாத்திரங்களாக வந்தவர்களையும் கொண்டு இயக்கப்பட்டுள்ள படம்தான் பருந்தாகுது ஊர்குருவி. இப்படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓர் இரவு..அடர்ந்த காட்டுக்குள் ஒருவனை கொல்லத் துரத்தும் கும்பல்..அவனை காப்பாற்ற முயற்சிக்கும் நாயகன்..இறுதியில் என்ன நடந்தது? இதுதான் பருந்தாகுது ஊர்குருவி படத்தின் கதை
சின்ன சின்ன திருட்டுகள்-அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் ஆதி (நிஷாந்த் ரூசோ)
மிளகுக்காட்டில் யாரையோ வெட்டிப் போட்டிருப்பதாக போலீஸிற்கு தகவல் வருகிறது. அந்த இடத்திற்கு வழிக்காட்டச்சொல்லி, காவல் அதிகாரி போஸ் ஆதியை இழுத்துக்கொண்டு செல்கிறார். அங்கே சென்றவுடன், ஆதியின் கைய்யுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிடவிட்டு தான் போன் பேசிவிட்டு வரும்வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு கூறுகிறார்
ஆதி, கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கையில், பிணமாக கிடந்த நபருக்கு இன்னும் உயிர் இருப்பதை தெரிந்து கொள்கிறார். அப்போது, அந்த நபரின் தொலைப்பேசிக்கு யாரோ ஒரு பெண் போன் செய்து, அவரை காப்பாற்றுமாறு ஆதியிடம் கெஞ்சுகிறார்
அந்த நபரை ஆதி காப்பாற்றினாரா? அவரை கொல்ல முயற்சிக்கும் கும்பல் யார்? போன்ற பல கேள்விகளுடன் சுவாரஸ்யமே இல்லாமல் பயணிக்கிறது திரைக்கதை
படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு பிணத்தையும் அதனுடன் அமர்ந்திருக்கும் நாயகனையும் அவர்களது பக்கத்தில் ஒரு பாம்பையும் காட்டி ரசிகர்களை மிரட்டிய இயக்குனர், அதே மிரட்டலை படம் முழுவதும் காட்ட முற்றிலுமாக தவறியிருக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு வரவேண்டிய தொய்வு, படத்தின் இரண்டு-மூன்று காட்சிகளிலேயே வந்து விடுகின்றது
சர்வைவல்-த்ரில்லர் வகை கதையாக இருந்தாலும், அந்த ஜானருக்கு ஏற்ற வேகம் படத்தில் ஒரு இடத்தில் கூட இல்லை
பருந்தாகுது ஊர்குருவி படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்சாக பார்க்ப்பட்டது, அதன் பின்னணி இசையும் அபரிமிதமான ஒளிப்பதிவும்தான்
ஊர் குருவிக்கு பருந்தாக மாற தெரியாவிட்டால் தெரியாவிட்டால் பறவாயில்லை..பறக்க கூட தெரியவில்லையென்றால் எப்படி? என்று கேள்வியெழுப்புகின்றனர் ரசிகர்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -