Kannai Nambathey Review: அம்மாஞ்சி நாயகன் உதயநிதியை சுற்றி நடக்கும் கொலைகள்..இதுதான் கதை..கண்ணை நம்பாதே விமர்சனம்!
ஒரு கொலையை மறைக்க இன்னொரு கொலை.. இதற்கிடையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி ஹீரோ உதயநிதி.. சிக்கலில் இருந்து தப்பித்தாரா உதய்? விவரிக்கிறது பரபரப்பான திரைக்கதை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசோவென மழை பெய்யும் ஓர் இரவில் கார் ஓட்ட முடியாமல் தவிக்கும் கவிதாவிற்கு (பூமிகா) உதவி செய்கிறார், கதையின் நாயகன் அருண் (உதயநிதி)
தன்னை வீட்டில் ட்ராப் செய்யும் அருணிடம், காரை எடுத்துச் சென்று நாளை காலை திருப்பி தருமாறு கூறுகிறார் கவிதா. மறுநாள் காரின் டிக்கியை திறந்து பார்த்தால் பூமிகா சடலமாக கிடக்கிறார்
அந்த ஒரு இரவில் நடந்தது என்ன? கவிதாவின் கொலைக்கு காரணம் யார்? போன்ற பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது கண்ணை நம்பாதே படத்தின் மீதி கதை
புது வீட்டிற்கு குடிபெயரும் உதயநிதிக்கு புது ரூம்-மெட் பிரசன்னாவை சந்தித்தவுடன் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன
பூமிகாவை, தான் கொலை செய்யவில்லை என்றாலும் புது நண்பனின் பேச்சைக் கேட்டு அவர் சொல்படி பிணத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்வது நம்ப முடியாததாக உள்ளது
ஆரம்பத்தில் காதல்-பாடல் என மெதுவாக நகர்ந்த கதை இரவு நேர மழை காட்சிக்கு பின் சூடுபிடிக்கிறது
முதல் பாதி முழுவதும் முடிச்சுக்கு மேல் முடிச்சுகள் தான் அதை அடுத்த பாதையில் கரெக்டாக அவிழ்த்து ரசிகர்களை ஏமாற்றாமல் அனுப்புகிறார் இயக்குனர் மு. மாறன்
கிளைமாக்ஸ் காட்சி, ஆடியன்ஸை இருக்கை நுனிக்கே வர வைத்து விடுகின்றது. முதலில் அம்மாஞ்சியாக தோன்றும் ஹீரோ இறுதியில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவது சற்று நம்புவதற்கு நெருடலாகதான் உள்ளது
உடன் பழகுபவர்களை எளிதில் நம்பக்கூடாது எனும் கருத்துடன் முடியும் கண்ணை நம்பாதே படத்தை, நல்ல த்ரில்லிங் அனுபவத்திற்காக தியேட்டரில் போய் பார்க்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -