Bakasuran Movie Review : செல்வராகவனுக்கு அடுத்த மைல்கல்லாக அமையுமா பகாசூரன்? முழு விமர்சனம் இதோ!
பாலியல் தொழிலில் எப்படி பெண்கள் தள்ளப்படுகின்றனர், அதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை அலசி ஆராய்ந்துள்ளது பகாசூரன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெண்களை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவோரையும், அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் சரமாரியாக போட்டுத்தள்ளுகிறார், பீமராசு(செல்வராகவன்)
இதற்கிடையில், முன்னாள் ராணுவ வீரரான நட்ராஜனின் சொந்த அண்ணன் மகள் ரம்யா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கு காரணம், அவர் பாலியில் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் அவரை அந்த தொழிலை தொடரச் சொல்லி யாரோ மிரட்டியதும்தான் என்பதை அறிந்து கொள்கிறார் நட்ராஜ்
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாலியல் தொழிலால் உயிரழந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என எண்ணும் நட்டி, இது போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரைத் தேடி அலைகிறார். அப்போது அவரது கண்களில் படுபவர்தான் பீமராசு
வேறு ஒரு ஊரில் தனது அடையாளத்தை மறைத்து வாழும் பீமராசு, பாலியல் தொழிலில் பெண்களை பலவந்தமாக ஈடுபடுத்துவோரை துவம்சம் செய்கிறார். அதன் பிண்ணனி என்ன? பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்ததா? என்பதே கதை
போர் அடிக்காத திரைக்கதை, காதுகளை கிழிக்கும் அளவிற்கான பிஜிஎம் என சில சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், படத்தின் முதல் பாதி நீளமாகவே தோன்றுகிறது
செல்வராகவனின் நடிப்பு முதலில் மனதில் ஒட்டவில்லை என்றாலும், படம் முடிந்தவுடன் மனசு முழுவதும் அவர்தான் நிற்கிறார்
மிகவும் உணர்வுப்பூர்வமாக அனுக வேண்டிய சில விஷயங்களை ஏனோ தானோ எனக்கூறியது போன்ற உணர்வைக் கொடுக்கிறது பகாசூரன்
மொத்தத்தில் சொல்ல வந்த கருத்தை முழுமையாக சொல்லவும் முடியாமல் மொத்த பழியையும் செல்போன் உபயோகத்தின் மேல் போடுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது
இன்னமும் பரிணாம வளர்ச்சி அடையாமல், படிப்பறிவின்றி இருக்கும் பல மனிதர்களுக்கான கதை போன்று இருக்கிறது பகாசூரன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -