Agilan review : பக்காவான திரைக்கதை கில்லாடியான கடத்தல்காரனாக அகிலன்..குட்டி விமர்சனத்தை பார்க்கலாமா?
துறைமுகத்தில் புத்திசாலித்தனமாக கள்ளக்கடத்தல் தொழில் செய்பவராக, ஹீரோ அகிலன்.எத்தனை காவல் அதிகாரிக் வந்தாலும் அவர்களது கண்களில் மன்னை தூவிவிட்டு கடத்தல் பொருட்களை பத்திரமாக கண்டெய்னரில் ஏற்றுகிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் உள்பட பல கடத்தல்காரர்களுக்கு தலைவனாக கபூர் என்பவன் விளங்குகிறார்.அகிலனின் வேலைகளினால் ஈர்க்கப்படும் கபூர், அவனிடம் ஒரு பெரிய வேலையை கொடுக்கிறார்
அந்த வேலையை அகிலன் செய்து முடித்தாரா? அகிலனின் உண்மையான முகம்தான் என்ன? போன்ற கேள்விகளுடன் தொடர்கிறது திரைக்கதை
ஜெயம் ரவிக்கு ரக்கட் ஹீரோ டைப் நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது.சண்டை காட்சிகளில் வில்லன்களை அசால்ட்டாக பறக்க விடுகிறார்
சண்டை காட்சிகள், இசை, திரைக்கதை அபாரம். குறிப்பாக, கடத்தல் கண்டெய்னர்களை கடலில் உள்ள கப்பலில் ஏற்றும் காட்சிகள் ‘திக்..திக்’கை கூட்டுகின்றன
பெயருக்கு பிரியா பவானி சங்கரை ஹீரோயினாக வைத்துள்ளனர்.அவ்வப்போது ஜெயம் ரவிக்கு உதவி செய்யும் காட்சிகளில் மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
வழக்கமான கோலிவுட் படங்களை போலவே இதிலும், 4ற்கும் மேற்பட்ட சண்டை காட்சிகளும், ஆங்காங்கே பாடல்களும், அவ்வப்போது பஞ்ச் வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன
மற்ற படங்களிடமிருந்து அகிலன் வேறுபடுவது, அதன் திரைக்கதையினால் மட்டுமே. நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு நார்மலான கமர்ஷியல் படத்தை பார்த்த உணர்வினை தருகிறது, அகிலன் திரைப்படம்
‘குக் வித் கோமாளி’ புகழ் மைம் கோபியும், காளையனையும் படத்தில் பார்த்தது இன்ப அதிர்ச்சி
மொத்தத்தில், ஆற அமர உட்கார்ந்து நல்ல கதையுடன் கூடிய ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அகிலன் படத்தை தாராளமாக பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -