Deiva Machan Review: தங்கையின் தாலிக்கு வரவிருக்கும் ஆபத்தை தடுப்பாரா ஹீரோ..இதுதான் தெய்வ மச்சான் படத்தின் விமர்சனம்
யார் சாகப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறியும் ஹீரோ தங்கையின் தாலிக்கும் ஆபத்து இருப்பதை தெரிந்து கொள்கிறார்.. அடுத்து நடந்தது என்ன? இதுவே தெய்வ மச்சானின் திரைக்கதை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதங்கை குங்குமத்தேனை (அனிதா சம்பத்) எப்படியாவது திருமணம் செய்து கரை சேர்த்து விட வேண்டும் என்று போராடும் அண்ணன் கார்த்தி (விமல்). இவரது கனவில் வரும் சாட்டைக்காரன், யார் இறக்க போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்கிறான்.
தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு கார்த்தியின் கனவில் வரும் சாட்டைக்காரன் உன் தங்கச்சி புருஷன் கல்யாணமாகி இரண்டு நாளைக்குள் இறந்து விடுவான் என்று கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியுறும் ஹீரோ அடுத்து என்ன செய்கிறார் என்பதை கிராமத்து வாடை வீசும் காமெடி பாணியில் விவரிக்கிறது மீதி கதை.
தெய்வ மச்சான் படத்தின் இயக்குநர் நிர்மலிற்கு இன்னும் கொஞ்சம் சினிமா அனுபவம் தேவை என்பது, நன்றாக தெரிகிறது. தேவையற்ற காட்சிகளால் ஆரம்பத்திலேயே படம் கொஞ்சம் சோர்வடைய செய்கின்றது.
சில இடங்களில் ஒர்க்-அவுட் ஆகாத காமெடி கவுண்டர்கள், பல இடங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதனால், கதையில் உள்ள குறைகள் கடைசியில் ரசிகர்களின் கவனத்தில் படமால் தப்பித்து விடுகின்றது.
படத்தில் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா, விமல், வேல ராமமூர்த்தி தவிர வேறு யாரும் தேர்ந்த நடிகர்கள் என கூறும் அளவிற்கு யாரும் இல்லை.
செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் முகம் காட்டிய அனிதா சம்பத்திற்கு முதல் முறையாக பெரிய ரோல் கொடுத்துள்ளனர். அதை அவர் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில், பொறுமை அதிகம் என்றால், இந்த படத்தை தாராளமாக திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -