Bommai review: மனங்களை கவர்ந்ததா எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை..? குட்டி ரிவ்யூ இதோ..!
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘பொம்மை’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமன நல பிரச்சினைகளால் அவதிப்படும் நிலையில் பொம்மைகள் செய்யும் இடத்தில் வேலை பார்க்கும் ராஜூவுக்கு (எஸ். ஜே.சூர்யா) ஒரு குறிப்பிட்ட பொம்மை மேல் காதல் உள்ளது.அந்த பொம்மையை தனது இளம்வயது காதலி (ப்ரியா பவானி சங்கர்) ஆகவே பாவித்து வருகிறார்.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவின் காதலி பொம்மை விற்கப்படவே கோபத்தில் அந்த கடையின் சுப்பர்வைசரை கொலை செய்கிறார். மீண்டும் வேறொரு ஷோரூமில் அந்த பொம்மையை கண்டுப்பிடித்து அங்கேயே வேலைக்கும் சேர்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
கொலை செய்த எஸ்.ஜே.சூர்யா போலீசிடம் சிக்கினாரா?..அவர் ஆசைப்பட்ட வாழ்க்கையை பொம்மையுடன் வாழ்ந்தாரா?, எஸ்.ஜே.சூர்யா என்பதே மீதி கதை.
படத்தின் பிரதான கேரக்டர் பொம்மை தான். பிரியா பவானி ஷங்கர் பொம்மையாகவே மிளிர்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாசமான நடிப்பு படத்தை தாங்குகிறது. குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் விசாரணை காட்சிகளில் நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் தொடர்பான கற்பனை காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசையில் கலந்து வரும் ‘தெய்வீக ராகம்’ பாடலின் ஹம்மிங் ரசிக்க வைக்கிறது.
லாஜிக் இல்லாத கதை, ஸ்லோவான திரைக்கதை என்று சில குறைகள் இருந்தாலும் எந்த வயதிலும் விளையாட்டு பொருளான 'பொம்மை’யை பார்த்தால் ரசிப்பவர்கள்.. இந்த ‘பொம்மை’யையும் ரசிப்பார்கள்..என்றே கூறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -