Kathar basha endra muthuramalingam : ‘அல்லாவும் அய்யனாரும் ஒன்னு..’ எப்படி இருக்கிறது காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்..? குட்டி விமர்சனம் இதோ!
முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு, பாக்கியராஜ், ஆடுகளம் நரேன், தமிழ் உள்ளிட்ட பலர் நடித்த ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘விருமன்’ படத்துக்குப் பிறகு மற்றொரு தென் தமிழ்நாட்டு கதைக்களத்துடன் ‘பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும்’ சண்டை செய்யும் ஊரைப் பற்றிய கதைக்களத்துடன் இப்படத்தை இயக்கியுள்ளார் முத்தையா.
தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனி ஆளாக வளர்த்து வரும் தமிழ்ச்செல்வியை (சித்தி இத்னானி) அவரின் சொத்தை அபகரிக்க நினைக்கும் சொந்தபந்தங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக சம்பந்தமில்லாத காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் (ஆர்யா) சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்து வருவோர் போவோர் எல்லோரையும் துவைத்து துவம்சம் செய்கிறார்.
ஆர்யா யார், எங்கிருந்து வந்தார், அவருக்கும் சித்தி இத்னானிக்குமான உறவு என்ன? ஆர்யாவின் பின்புலம் என்ன என்பதை நீ...ளமான கதையாக சொல்லியிருக்கும் படம் தான் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
இரண்டாம் பாதியில் பிரபு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனமீர்க்க விறுவிறுப்பாக செல்கிறது இரண்டாம் பாதி.ஃபிளாஷ்பேக் காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக்கினாலும் அதன் பின் திரைக்கதை மீண்டும் சோர்வடைகிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களில் புதுமை எதுவும் இல்லை. பின்னணி இசை ஓகே ரகம். சலிப்பு தட்டும் முதல் பாதியை விறுவிறுப்பாக்கி, இரண்டாம் பாதியைப் போலவே கொடுத்திருந்தால் தரமான ஆக்ஷன் மசாலாவாக காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் கெத்து நடைபோட்டிருக்கும்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -