Kolai Review : ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட கொலை திரைப்படம்... க்ரைம் திரில்லரா? இல்ல படும் போர்ரா?
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் 'கொலை’.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபடக்கதை : பாடகி மற்றும் மாடல் அழகியான மீனாட்சி சௌத்ரி கொலை செய்யப்படுகிறார். இக்கொலையை கண்டு பிடிக்க ஐபிஎஸ் அதிகாரியான ரித்திகா சிங் வருகிறார். அவருக்கு உதவியாக துப்பறிவு திறமை கொண்ட விஜய் ஆண்டனி உதவுகிறார்.
இவர்களின் விசாரணையின் பார்வை காதலன், மேனேஜர், மாடலிங் உலகுக்கு அறிமுகம் செய்தவர், மாடலிங் கம்பெனி நிர்வாகி, கொலை செய்யப்பட்ட மீனாட்சி என அனைவரது பார்வை வழியாகவும் விவரிக்கப்படுகிறது.
இறுதியில் உண்மை குற்றவாளி எப்படி சிக்கினான் என்பதை ஹாலிவுட் மேக்கிங் திரைக்கதையால் ரசிகருக்கு கொடுத்துள்ளார் பாலாஜி குமார்.
விஜய் ஆண்டனி தனக்கான கேரக்டரில் அடக்கி வாசித்துள்ளார் என்றே சொல்லலாம்.
இவர்களை விட மீனாட்சி சௌத்ரி கேரக்டர் தான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகியாக அறிமுகமாகி, மாடல் உலகுக்கு சென்று பிரபலமாகி, போலியான வாழ்க்கை வாழ்வதாக உணரும் நபராக வருகிறார்.
மொத்தத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை படத்தை அதன் மேக்கிங்கிற்காக ஒரு டைம் தியேட்டரில் பார்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -