Mothers Day 2024:தமிழில் சிறந்த அம்மா சென்டிமென்ட் படங்கள் லிஸ்ட்!
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில், அம்மா கேரக்டரில் நதியா மகனாக ஜெயம் ரவி நடித்துள்ளனர். இந்த படத்தில் நீயே நீயே நானே நீயே என்ற அம்மா பாடல் இடம் பெற்றுள்ளது.
விஜய் ஆண்டனி மகனாகவும், தீபா ராமானுஜம் அம்மாவாக நடித்துள்ள படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் நூறு சாமிகள் இருந்தாலும் என்ற அம்மா படம் இடம் பெற்றுள்ளது.
கேங்ஸ்டர் படமான கே ஜி எஃப் படத்தில் கருவினில் என்னை சுமந்து என்ற அம்மா பாடல் இடம் பெற்றுள்ளது
ராம் படத்தில் ஜீவா மகனாகவும், சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்துள்ளார். ராம் படத்தில் ஆராரிராரோ என்ற அம்மா பாடல் இடம் பெற்றுள்ளது.
பாண்டி படத்தில் ராகவா லாரன்ஸ் மகனாகவும், சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்துள்ள படத்தில் ஆத்தா நீ இல்லைனா என்ற அம்மா பாடல் இடம் பெற்றுள்ளது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் மகனாகவும், சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அம்மா அம்மா நீ எங்க அம்மா என்ற அம்மா பாடல் இடம் பெற்றுள்ளது.
. அனைத்து அன்னைமார்களுக்கு ABP சார்பாக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.