HBD Mohanlal : எம்புரான் படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்! மோகன்லால் பர்த்டே ஸ்பெஷல்!
லாவண்யா யுவராஜ் | 21 May 2024 03:39 PM (IST)
1
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக கொண்டாடப்படுபவர் மோகன்லால்.
2
தமிழில் இருவர், ஜில்லா, உன்னை போல் ஒருவன், காப்பான், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3
இன்று மோகன்லால் தன்னுடைய 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
4
திரைபிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
5
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'லூசிஃபர்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
6
அதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் பான் இந்தியன் படமாக உருவாகி வருகிறது.
7
இன்று மோகன்லால் பிறந்தநாளை முன்னிட்டு எம்புரான் படத்தின் புதிய போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.