உலக புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் தொடக்கம்!
உலக புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்
முன்னதாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
25-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 2-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, இரவு கும்பப் படையல், காப்புகளைதல், கொடியிறக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -