New Movie Releases : மே நான்காம் வாரத்தில் தியேட்டரில் வெளியாகவுள்ள படங்கள்!
ராகேஷ் இயக்கத்தில் நடிகர் ராமராஜனின் 45 வது படமான சாமானியன் படம் வருகின்ற மே 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கே எஸ் ரவி குமார் , எம் எஸ் பாஸ்கர், ராதா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கார்த்திக் வேணு கோபாலன் இயக்கியுள்ள PT Sir படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து, நடித்துள்ளார். காஷ்மீரா பர்தேஷி, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் வரும் மே 24 வெளியாகவுள்ளது.
ரிஷிகேஷ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் முருகன் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்துள்ள படம் பகலறியான். இந்த படம் வருகின்ற மே 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.
டைகர் வெங்கட் இயக்கத்தில் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் இணைந்து நடித்துள்ள படம் தண்டுபாளையம். இந்த படமும் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஹாலிவுட் ஆக்ஷன் த்ரில்லர் படமான பியூரியோசா : எ மேட் மாஸ் சாகவை ஜார்ஜ் மில்லர் இயக்கியுள்ளார். கிறிஸ் ஹெம்ஸ்வர்த் நடித்துள்ள இந்த படம் வருகின்றன மே 24 ஆம் தேதி வெளியாகிறது.