Mark Antony : ‘வாழ்க்கை ஒரு போர்க்களம்..’ பல இடர்களுக்கு பின் வெளியாகும் மார்க் ஆண்டனி டீசர்!
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் புதிதான ட்ரெண்டை உருவாக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் AAA,பகீராவிற்கு பின் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வருகிறார். மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே பல்வேறு இடர்களை அப்படக்குழு சந்தித்து.
பட்ஜெட் காரணத்தால் இந்த படம் சற்று காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு 2022 பிப்ரவரியில் படத்திற்கான வேலைகள் மும்முரமாக தொடங்கியது.
எஸ் ஜே சுர்யா, செல்வராகவன், சிரஞ்சீவி ஆகிய பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் நடிகர் விஷால் மீது மோத சென்றது. ஆனால், விஷால் எந்தபாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினார்.
இதனையடுத்து படத்தில் வேலைப்பார்த்து வந்த லைட்மேன் ஒருவரின் தலையில் காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல பிரச்சினைகளை சந்தித்த இந்த படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.