Maamannan : 50வது நாள் கொண்டாட்டத்தை சிறப்பித்த மாமன்னன் படக்குழு!
உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த ஜூன் மாதம் வெளிவந்த படம் மாமன்னன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
தற்போது மாமன்னன் படத்தின் பிடிஎஸ் (Behind the Scenes)புகைப்படங்களை ரெட் ஜெயண்ட், அதன் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் நேற்றுடன் மாமன்னன் படம் 50 வது நாளை கடந்து இன்னும் திரையரங்கில் ஓடி கொண்டிருப்பதையொட்டி 50 வது நாள் விழாவை படக்குழு நடத்தியது. இதில் திரைபிரபலங்கள், அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மாமன்னனின் 50வது நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ். அந்த பதிவில், “பெருந்துயர் வாழ்வுதான் என்றாலும் அதற்குள் அறத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த அளப்பரிய வெற்றியை சமர்பிக்கிறேன். உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிகொண்டே இருப்பேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -