New Movie Releases : மாலிவுட் முதல் ஹாலிவுட் வரை.. இந்த வாரம் வெளியான சூப்பர் படங்கள்!
மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் மாலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ஆகியவற்றில் ஒவ்வொரு படங்கள் தியேட்டரில் வெளியாகியுள்ளது
பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப். உண்மையாக நடந்த சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஆடுஜீவிதம் எனும் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அனுபமா பரமேஸ்வரன், சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக் க்ரைம் காமெடி படம் தில்லு ஸ்கொயர். விதவிதமான போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, ரசிர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கரீனா கபூர், தபு, கிருத்தி சனோன் ஆகிய மூவரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் க்ரூ. விமான பணிப்பெண்களாக வேலைப்பார்க்கும் இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் காமெடி கலந்த க்ரைம் சம்பவங்களே படத்தின் கதை.
தமிழ்நாட்டில் விஜய்க்கும் அஜித்திற்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு ரசிகர்களும் காட்ஜிலாவிற்கும் கிங்காங்கிற்கும் உள்ளனர். 2021ல் காட்ஜிலா Vs காங்க் படம் வெளியானதை தொடர்ந்து, இந்தாண்டு காட்ஜிலா x காங்: தி நியூ எம்பயர் வெளியாகியுள்ளது