Mani Sharma : வெரைட்டி மியூசிக் மன்னன் மணி சர்மாவின் பெஸ்ட் ஆல்பம்!
கே எஸ் ரவி இயக்கிய ஷாஜகான் படத்திற்கு மணி சர்மா இசையமைத்திருந்தார். மின்னலை பிடித்து, மெல்லினமே போன்ற பாடல்கள் இன்றைக்கும் சிறந்த காதல் பாடலாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2002 ஆம் ஆண்டு அர்ஜுன் இயக்கி, நடித்த இருந்த படம் ஏழுமலை. இந்த படத்தில் லக்ஸ் பாப்பா என்ற பாடல் சிறப்பாக இருக்கும். மேலும் அர்ஜுனுக்கு வெறித்தனமான பிஜிஎம்-ஐ இசையமத்து இருப்பார் மணி சர்மா.
பேரரசு இயக்கிய திருப்பாச்சி படத்தில் விஜய் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத், தினா, மணி சர்மா ஆகிய மூவர் இசை அமைத்திருந்தனர். கண்ணும் கண்ணும் என்ற பாடலுக்கு மணி சர்மா இசையமைத்திருந்தார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்திற்கு மணி சர்மா இசை அமைத்திருந்தார். வசந்த முல்லை, டோலு டோலு, மாம்பழமா மாம்பழம் என்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. பதி பதி தளபதி என்ற தீம் மியூசிக்கும் வெறித்தனமாக இருக்கும்.
பூபதி பாண்டியன் இயக்கி மலைக்கோட்டை படத்திற்கு மணி சர்மா இசையமைத்திருந்தார். கந்த கடம்பா மோட்டிவேஷனல் பாடலாகவும், ஏ ஆத்தா.. குத்து பாடலாகவும் அமைத்தது.
தோரணை படத்தில் வரும் மஞ்ச சேலை, வா செல்லம் என்ற பாடல் மணி சர்மாவின் தனித்துவத்தை கூறும் வகையில் அமைந்தது. இப்படத்தை சோபா அய்யப்பன் இயக்கி இருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -