KH 234 Title : மிரளவைக்கும் கமல்ஹாசனின் லுக்.. இன்று வெளியாகிறது கே.ஹெச் 234 படத்தின் டைட்டில்!
கடந்த பத்து ஆண்டுகளில் சற்று சுமாரான படங்களில் நடித்து வந்த கமலுக்கு பம்பர் லாட்டரி போல் அமைந்தது லோகேஷின் விக்ரம் படம்.
அத்துடன் சமீபத்தில் வந்த லியோ படத்தின் க்ளைமாக்ஸில் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார்
இதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார் கமல். இந்தியன் 2வின் படப்பிடிப்பு இன்னும் நடைப்பெற்று வருகிறது. அநேகமாக இப்படம் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வெளியாகலாம்.
பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் கல்கி 2898 ஏடி படத்திலும் கமல் நடித்து வருகிறார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் கமலின் 232வது படத்தை இயக்குகிறார்.
அடுத்ததாக மணிரத்னத்தின் படத்திலும் கமல் பிசியாகவுள்ளார். கே.ஹெச் 234 எனும் பெயரிடப்படாத இப்படத்தின் டைட்டில் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளது படக்குழு