Mamannan : வந்தாச்சு அதிகாரபூர்வ அறிவிப்பு..கோலகலமாக நடைபெறவிருக்கும் மாமன்னன் இசை வெளியீட்டு விழா!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் படம் மாமன்னன்
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஃபஹத் ஃபாசில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான ராசா கண்ணு சமீபத்தில் வெளியாகி வைரலானது. இசைபுயலின் இசையை வைகை புயலின் குரல் சற்று ஓவர் டேக் செய்தது.
முதல் பாடலின் இசைக்கு முரணாக அமைந்த ஜிகு ஜிகு ரயில் இரண்டாவது சிங்கிளாக வெளியிடப்பட்டது. ஜாலியான ரெகெ இசை வடிவத்தில் அமைந்த இப்பாடலில் ஏ.ஆர்.ஆரின் க்யூட் நடனம் ஹைலைட்டாக அமைந்தது.
தற்போது மாமன்னன் படத்தின் இசை வெளீயிட்டு விழா நேரு அரங்கத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
ஓகே ஓகே படத்தில் காமெடி கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் மாமன்னன் என்பது குறிப்பிடதக்கது.