R.K.Narayanan : ‘நியாபகம் வருதே நியாபகம் வருதே ..’ மால்குடி ஆர்.கே நாராயணின் நினைவு தினம் இன்று!
R.K.நாராயணன் என்று அழைக்கப்படும் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயணசுவாமி , புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இணைந்து ஆங்கில எழுத்தாளராக தன் பயணத்தை தொடங்கினார்.
அவரின் கற்பனை கைவண்ணத்தில் உருவான மால்குடி கதைகள் மிகவும் பிரபலமானது.
மால்குடி என்பது ஆர். கே. நாராயணின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் இடம்பெறும் ஒரு கற்பனை நகரமாகும். இது, இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டத்தில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டு இருப்பார்.
நாராயணின் எழுத்து நடை வில்லியம் பால்க்னருடன் ஒப்பிடப்பட்டது. ஏனெனில் அவர்களின் படைப்புகள் பெரும்பாலாக சமானியனின் கதையையும் அவனை சுற்றி நடக்கும் நகைச்சுவை நிகழ்வுகளையும் விவரித்தது.
நாராயணின் எழுத்து நுட்பம், நகைச்சுவையின் இயல்பான அம்சத்துடன் பாசாங்கு இல்லாமல் இருந்தது. இது சாதாரண மக்களை மையமாக வைத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள் போன்றோரை வாசகருக்கு நினைவூட்டி, தலைப்புடன் தொடர்புபடுத்தும் திறனை அதிகப்படுத்தியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -