Malaysia Vasudevan : ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்..’ - தனித்துவமான குரல் கொண்ட மலேசியா வாசுதேவனின் நினைவு நாள் இன்று!
தமிழ் திரையுலகில் எஸ்பி. பாலசுப்ரமணியத்திற்கு இணையாக பாடி வந்தவர் மலேசியா வாசுதேவன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மலேசியாவில் குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளார்.
ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் படத்தில் ‛பாலு விக்கிற பத்தம்மா...’ என்ற பாடலை பாடினார். இதுவே அவரின் முதல் பாடலாகும்.
பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் அனைத்துப் பாடலையும் பாடியிருந்தார் மலேசியா வாசுதேவன்.
சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்டோருக்கு ஓப்பனிங் பாடல்கள் பாடிய பெருமை வாசுவுக்கு உண்டு.
2011 ஆம் ஆண்டில் திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார் மலேசியா வாசுதேவன்.
2011 ஆம் ஆண்டின் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று பகல் 1 மணியளவில் இந்த மண்ணை விட்டு மறைந்தார் மலேசியா வாசுதேவன்.
தன்னுடைய 66வது வயதில் அவர் தன்னுடைய கலைப்பணியை நிறைவு செய்து விடைபெற்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -