Vidamuyarchi Update : ‘எங்கள் ஆட்டம் தொடங்கபோது..’ ட்வீட் செய்த மகிழ் திருமேனிக்கு ஸ்வீட் வாழ்த்து சொன்ன சிம்பு!
2023 ஆண்டின் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படம் வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படம் குறித்த பேச்சு வார்த்தை தொடங்கிய போது, வழக்கதிற்கு மாறாக அஜித்தின் புகைப்படங்களும் அவர் மேற்கொள்ளும் பைக் டூர் பற்றிய தகவல்களும் காற்றில் தீயாய் பரவியது.
அதுமட்டுமன்றி, அஜித்தின் குடும்ப புகைப்படங்களும் வெளியானது. அஜித்தின் மனைவியான ஷாலினி இன்ஸ்டாவில் சேர்ந்து, அவர் பங்கிற்கு அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டார்.
துணிவு படத்திற்கு பின் ஏ.கே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். சில காரணங்களால் அவர் அப்படத்தை இயக்கமுடியாமல் போனது.
அதன் பின், ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க, அனிரூத் இசையமைப்பார் என்ற தகவல் வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதியில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது.
பல ட்ரால்களை சந்தித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மே 22 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மகிழ் திருமேனி ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதற்கு சிம்பு, “உங்களுக்கும் விடாமுயற்சி படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ஆருயிர் தல அஜித்குமார் அண்ணா.” என பதில் ட்வீட் செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -