Ponniyin Selvan 2 : சுபாஸ்கரன் அல்லிராஜாவின் பிறந்தநாளையொட்டி அப்டேட்களை அள்ளிவிடும் லைகா நிறுவனம்!
கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் இயக்கினார்.
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், நல்ல வசூலை ஈட்டியது.
முதல் பாகத்தின் தொடர்ச்சி கதை, இரண்டாம் பாகமாக வெளியாகிறது
பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது
முதல் பாகத்தின் ரிலீஸையொட்டி, பெரிய அளவில் ப்ரோமோஷன் நடைப்பெற்றது.
இரண்டாம் பாகம் வெளியாக சில வாரங்கள் மட்டுமே உள்ளது.
நேற்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தொடர்பான க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
அதில், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம், ஜெய்ராம் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் அருண்மொழிவர்மன், உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இரண்டாம் பாகம் பதில் சொல்லும்.
இன்று லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் பிறந்தநாளையொட்டி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது.
தலைவர் 170 பட அறிவிப்பும் வெளியானது. ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தை, டி.ஜே.ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.