Lyca Production Lineup : அடுத்தடுத்த தயாரிப்பில் பிசியாகும் லைகா நிறுவனத்தின் லைன்-அப் இதுதான்!
கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனையடுத்து பி.வாசு இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் - விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது லால் சலாம். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினகாந்த் நடிக்கிறார்.
ஷங்கர் - கமல் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படம் மிக பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவனி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரஜினியின் 170ஆவது படத்தை, ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். இதில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சனும் இணைந்து நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஃபஹத் ஃபாசில், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனராம்.
நடிகர் அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் நடிகர் அஜித் சென்னை வந்துள்ளார் என சொல்லப்படுகிறது.
மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 2018. இதையடுத்து ஜூட் அந்தனி ஜோசப்பின் அடுத்த படம் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ளது.
பிரபல நடிகர் விஜய்யின் மகன் சஞ்சயின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த அறிவிப்பு அத்தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் வெளியானது.
ஏ. எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஷன். இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், ஆகியோர் நடித்துள்ளனர். இது முழுக்க முழுக்க அக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -