Thalaivar 171 : ஜெயிலர் ஃபீவர் குறையும் முன்னரே ரஜினி ரசிகர்களை குதூகலப்படுத்திய சன் பிக்சர்ஸ்!
ரஜினி - நெல்சன் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டது. அதை தொடர்ந்து இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது.
ஒரு பக்கம் ரஜினியின் ரசிகர்கள் சந்தோஷமாக இருக்க, மற்றொரு பக்கம் விஜய்யின் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜின் லியோ படத்திற்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.
லியோவிற்கு பின்னர் லோகேஷ் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற கேள்விக்கு, ரஜினியை வைத்துதான் படத்தை உருவாக்குவார் என்ற தகவல் பரவிவந்தது.
தற்போது இதுகுறித்த் அதிகாரப்பூர்வ தகவலை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இம்முறை, ரஜினி- லோகேஷ் கனகராஜ்-சன் பிக்சர்ஸ் இணைகிறது. பல லைன் அப்களை கொண்ட அனிருத், இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
இப்படம் 2024 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால், த.சே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ரஜினியின் 170வது படத்திற்கு பின்னரே, லோக்கியின் 171 வது படம் தயாராகும். அதனால் தலைவர் 171 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம்.
இதற்கு இடையில் லோகேஷ் கனகராஜ், கைதி 2, இரும்பு கை மாயாவி, ரோலக்ஸ், என ஏதேனும் ஒரு படத்தை எடுத்து முடிக்க வாய்ப்புள்ளது.