HBD Lokesh Kanagaraj : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பர்த்டே..குவியும் வாழ்த்துக்கள்!
இளைஞர்களுக்கு பிடித்த படங்களை எடுக்கும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
அவரின் மேக்கிங், சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்துள்ளது
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் வரிசையில் இடம்பெற்றுள்ளார்.
கடைசியாக அவரின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 என்ற படத்தை இயக்க உள்ளார்.
தலைவர் 171 படத்திற்கான கதையை தற்போது எழுதி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.