OTT releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? பட்டியல் இதோ!
திரையரங்க ரிலீஸுக்கு பின்னர் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்...
Download ABP Live App and Watch All Latest Videos
View In App12வது ஃபெயில் : விது வினோத் சோப்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் மேதா ஷங்கர், விக்ராந்த் மாஸ்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் அக்டோபர் 27ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் டிசம்பர் 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
அன்னபூரணி : நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. செஃப் ஆக வேண்டும் என்ற அன்னபூரணியின் ஆசை நிறைவேறியதா என்பது தான் கதைக்களம். இது நயன்தாராவின் 75வது படம். மக்களின் வரவேற்பை பெற்ற இப்படம் டிசம்பர் 29ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
மங்களவாரம் : அஜய் பூபதி இயக்கத்தில் அஜ்மல், நந்திதா ஸ்வேதா, பாயல் ராஜ்புத். சைதன்யா ரவீந்திரா நடிப்பில் 'செவ்வாய்கிழமை' என்ற பெயரில் கடந்த மாதம் தமிழில் வெளியானது. ஹாரர் ஜானரில் வெளியான இப்படம் டிசம்பர் 28ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியானது.
பார்க்கிங் : ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜாவின் நடிப்பில் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. பார்க்கிங் பிரச்சினையை மையமாக வைத்து வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 30ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டைகர் 3 : சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் நவம்பர் 3ம் தேதி வெளியான இப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், ஷாருக்கான் உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இப்படம் வரும் டிசம்பர் 31ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -