Antony Das : யார் இந்த ஆண்டனி தாஸ்? சஞ்சய் தத் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் அப்டேட் தந்த படக்குழு!
மாஸ்டர் படத்துக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கைக்கோர்த்துள்ள லியோ திரைப்படத்தின் ஷூட் சமீபத்தில் நிறைவடைந்தது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீசாகும் என பட பூஜை அன்றே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கிட்டத்தட்ட இன்னும் ரிலீசுக்கு இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், படக்குழு தொடர் அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது.
அதன்படி முன்னதாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘நா ரெடி தான்’ பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடலும் பாடல் வரிகளும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், யூடியூப் தளத்தில் ஹிட் அடித்தது.
இன்று சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் முதலில் வரும் பேக்-ரௌண்ட் நா ரெடி பாடலின் பேக்-ரௌண்ட் போல் இருக்கிறது. மேலும் இப்பாடலில் இடையில் ஆண்டனி என்று கூறும் குரல், ஃபஹத் ஃபாசிலின் குரல் போல் தோன்றுகிறது.
மேலும் இந்த வீடியோவின் தொடக்கத்தில் கழுகின் சத்தம் கெட்டதும் மயிர்க்கூச்செறிகின்றது. பின் தேவலாயத்திற்குள் நுழைந்த அனுபவத்தை அந்த பின்னணி இசை தருகிறது. உற்று கவனிக்கும் போது காஷ்மீரி-லடாக் வட்டாரத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை உச்சரிப்பது போல் தெரிகிறது. இப்படத்தின் சில காட்சிகள் காஷ்மீரில் படமாக்கபட்டதால், வரிகள் அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
இனி வரும் நாட்களில், இப்படக்குழுவினரின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்த அப்டேட்கள் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடிகர் சஞ்சய் தத் லியோ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.