Leo Update : இரண்டு பாகமாக வெளியாகிறதா லியோ? புதிய தகவலால் குஷியான ரசிகர்கள்!
சுபா துரை | 08 Aug 2023 05:16 PM (IST)
1
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ.
2
ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கிடையே நடிகர் விஜயின் பிறந்தநாள் அன்று லியோவின் முதல் பாடலான நான் ரெடி மற்றும் போஸ்டர்கள் வெளியாகின.
3
பிறகு சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் அவரது கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
4
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அர்ஜுனின் பிறந்தநாள் அன்று அவரது கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
5
இந்நிலையில் லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வரும் அக்டோபர் 19 அன்றும் இரண்டாம் பாகம் 2025-2026 ஆண்டில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
6
இந்த புதிய தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.