Leo Success Meet : இந்த வாட்டி மிஸ்ஸே ஆகாது..நாளை நடக்கவிருக்கும் லியோ வெற்றி விழா..ரசிகர்களுக்கு நிபந்தனைகள்..!
சுபா துரை | 31 Oct 2023 06:34 PM (IST)
1
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் லியோ.
2
இப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
3
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில பாதுகாப்பு காரணங்களுக்காக கேன்சல் செய்யப்பட்டது.
4
தற்போது லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா நடத்துவதற்காக காவல் துறையிடம் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.
5
இதையடுத்து நாளை லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.
6
கூடுதலாக அரங்கத்தில் நுழைவதற்கு பாஸ், டேக் மற்றும் ஆதார் கார்ட் இருக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.