Leo Audio Launch : லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது நடக்க போகிறது என்று தெரியுமா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக, ‘லியோ’படம் மூலம் இணைந்துள்ளது.
இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22 ஆம் தேதி அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளான‘நா ரெடி’எனும் பாடலும் வெளியானது.
ரிலீஸுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபநாட்களாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போதைய தகவலின் படி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக நெருங்கிய சினிமா திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதைதொடர்ந்து மலேசியாவில், லியோ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் இன்னும் தேர்வாகவில்லை எனவும் பேசப்படுகிறது.