Legend Saravanan : ‘இந்த முறை அடிக்குற அடி மரண அடி..’ புதிய அவதாரம் எடுத்த லெஜண்ட் சரவணா!
ஹரிஹரன்.ச | 26 May 2023 05:34 PM (IST)
1
தமிழகத்தின் பிரபல தொழிலதிபர்களுள் ஒருவர், சரவணன். ஆரம்பத்தில் தனது துணிக்கடை விளம்பரத்தில் தோன்றிய இவர், பின்னர் சினிமாவில் ஈடுபாடு காண்பிக்க ஆரம்பித்தார்.
2
கடந்த ஆண்டு வெளியான லெஜண்ட் படத்தில் நடித்து சினிமா உலகில் கால் அடி எடுத்து வைத்தார்.
3
லெஜண்ட் படத்தில் முன்னணி நடிகர்களான விவேக், பிரபு, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
4
இப்படத்தின் கதையும் அதில் வரும் சண்டை காட்சிகளும் சிறப்பாக அமைந்தாலும், நடிப்பில் கோட்டை விட்டார் லெஜண்ட் சரவணா.
5
லெஜண்ட் சரவணன் சமீபத்தில் போட்டோஷூட் செய்துள்ளார். நெட்டிசன்கள், அப்புகைப்படங்களை ஒவ்வொன்றாக பதிவிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
6
லெஜண்ட் சரவணனின் நடிப்பில், அடுத்த படம் தயாராகவுள்ளது என்று பேசப்படுகிறது.