Rajinikanth Speech : கூடிய விரைவில் நடக்கவிருக்கும் லால் சலாம் இசை வெளியீட்டு விழா.. இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை என்ன?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு மற்றும் விக்ரந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு படத்தின் அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பாக பணிகளை மேற்கொண்டது படக்குழு. அதனையடுத்து லால் சலாம் திரைப்படம் வரும் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்நிலையில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடைபெறுமென தகவல்கள் பரவி வருகிறது.
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினியின் ஸ்பீச் இருக்குமென சொல்லப்படுகிறது
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு காக்கா கதை பேசு பொருளாக மாறியதால் இம்முறையும் ரஜினி எதாவது பேசுவார் என்பது மக்களின் எதிர்ப்பார்பாக உள்ளது