Nayanthara: கேரியரில் டாப்பில் இருக்கும் போதே பிரபாஸுக்காக ரிஸ்க் எடுக்கும் நயன்? எச்சரிக்கும் ரசிகர்கள்!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் நயந்தாரா, 40 வயதை எட்டிய பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் கைவசம், டெஸ்ட், மண்ணாங்கட்டி, டாக்ஸிக், ராக்காயி, உள்ளிட்ட படங்கள் உள்ளன. ஹீரோயினாக நடிக்கும் போதே டாக்சிக் படத்தில் KGF யஷ்-க்கு அக்காவாக நடித்து அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா தற்போது ஐட்டம் டான்ஸ் வரை இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இயக்குனர் மாருதி இயக்கத்தில் பீப்பிள் மீடியா தயாரிப்பில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ராஜ சாப்'. இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் என இரண்டு நாயகிகள் நடிக்க, சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் ஹரீஷ் உத்தமன், முரளி ஷர்மா, அனுபம் கீர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
300 முதல் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், நடிகை நயன்தாரா டான்ஸ் ஆட உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இது ஐட்டம் டான்ஸாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நயன்... கேரியரின் டாப்பில் இருக்கும் போதே பிரபாஸுக்காக டான்ஸ் ஆடினால், அது இவரின் திரையுலகில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ரசிகர்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.