KVRK crew theatre visit: காத்துவாக்குல ஒரு தியேட்டர் விசிட்.. அலைமோதிய ரசிகர் கூட்டம்
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
கடந்த 28-ந் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நகைச்சுவையாக உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்திருந்தனர்.
இந்த படம் நன்றாக வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் சூழலில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, நாயகி நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் உள்ள தேவி சினிமாஸ் திரையரங்கிற்கு நேரில் சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடினர்.
பின்னர், அங்கு பணியாற்றும் திரையரங்க ஊழியர்களுடன் நயன்தாரா புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், படம் பார்க்க வந்த ரசிகர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.