Trisha As Kundavai : ப்ரோமோஷன் வேலையை துவங்கிய குந்தவை..இனிமே அடுத்தடுத்த அப்டேட்டிற்கு ரெடியா இருங்க!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. மாடலிங் துறையில் ஆரம்பித்து, துணை கதாபாத்திரங்களில் நடித்து, முன்னுக்கு வந்துள்ளார் த்ரிஷா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த தனலட்சுமி, ஜெஸி, ஜானு ஆகிய கதாபாத்திரங்கள், மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்து வருகிறது.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியும் பதிவிடுவார்.
சமீபத்தில், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வனின் முதன்மை கதாபாத்திரங்களுள் ஒன்றான குந்தவையாக நடித்தார்.
மணிரத்தினத்தின் குந்தவையாக இருப்பதில், நான் பெருமை அடைகிறேன் என த்ரிஷா முன்பு தெரிவித்து இருந்தார்.
ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனையொட்டி, ப்ரோமோஷன் வேலைகளும் மும்மரமாக நடந்து வருகிறது. தற்போது, குந்தவையில் வித விதமான புகைப்படங்களை ஒன்றாக பதிவிட்டுள்ளார் த்ரிஷா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -