Kollywood Directors Meetup : மணிரத்னம் வீட்டில் நடந்த சந்திப்பு.. இந்த கோலிவுட் கேங் உருவாகிய கதை உங்களுக்கு தெரியுமா?
லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், கெளதம் மேனன், சசி, மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்கள் நேரில் சந்தித்துள்ளனர்.இயக்குநர் மணிரத்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதற்கு நன்றி கூறும் விதமாக இயக்குநர் ஷங்கர், “இந்த ஸ்பெஷலான மாலை சந்திப்பை ஏற்பாடு செய்ததற்கு மணி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தரமான இயக்குநர்களுடனான இந்த சந்திப்பில் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை கேட்டு வைப் செய்தோம். இந்த தருணங்களைதான் நிஜமான சொத்தாக நான் கருதுகிறேன். உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி சுஹாசினி.”என தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், கொரோனா காலத்தில் ஒரு வாட்ஸ்-அப் குரூப் ஓபன் செய்யப்பட்தாகவும், இளம் இயக்குநர்களான அவரையும் கார்த்திக் சுப்பராஜையும் தவிர்த்து அதில் இருந்த அனைவரும் சீனியர் இயக்குநர்களாக இருந்தனர் என்று கூறியிருந்தார்.
அத்துடன் அந்த குரூப்பில், சினிமா சார்ந்த பல உரையாடல்கள் தொடர்ந்து நடக்கும் என்றும் அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்த குரூப் மூலம்தான் கெளதம் வாசுதேவ் மேனன் லோக்கிக்கு நெருக்கமாகியுள்ளார். பின், லியோ படத்தில் ஜி.வி.எம்மை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியாக தெரிவித்தார் லோகேஷ்.
இந்த அழகான புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தை இயக்கினால், அது எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தாலே புல்லரிக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -