Clean Bald Looks : ஆளவந்தான் கமல் முதல் காஷ்மோரா கார்த்தி வரை..மொட்டை லுக்கில் மாஸ் காட்டிய கோலிவுட் நடிகர்கள்!
“கடவுள் பாதி,மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான், வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்” எனும் வரிகளுக்கு ஏற்ப ஆளவந்தான் லுக்கில் க்ரே ஷேட் கதாபாத்திரத்தில் நடித்த கமல் ஹாசன்.மீசை, தாடி, தலை முடி என அனைத்தையும் க்ளீன் ஷேவ் செய்த கமலின் லுக், மிரட்டாளாக இருந்தது.
காதலியை தன் கண் முன்னே கொன்றவர்களை பழிவாங்க காத்திருக்கும் கஜினி சூர்யா. மொட்டை அடித்த பின்னர் வளரும் குச்சி முடி லுக், மன நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் கஜினிக்கு பொருந்தியது.
‘எம்.ஜி.ஆரும் நான்தான்..சிவாஜியும் நான்தான்..’என களைமாக்ஸில் வசனம் பேசி சில்லறையை சிதறவிட்ட சிவாஜி ரஜினி. மொட்டை மண்டை, தாடி வரை நீண்டு வரும் கிருத வைத்து ஸ்டைல் காட்டினார் ரஜினி.
சிவாகாமி சொல்லை தட்டாமல் பாகுபலியை கொன்ற மகிழ்மதியின் காவலன் கட்டப்பா சத்யராஜ். மொட்டை மண்டை, அடர்ந்த தாடி, தடியான மீசை வைத்த சத்யராஜ் பார்பதற்கு ராஜ காலத்தில் வாழ்ந்த மனிதர் போல் காட்சியளித்தார்.
துரோகிகளின் சூழ்ச்சியால் கொடும் நோயால் அவதிப்படும் ஐ விக்ரம் உடல்நல பிரச்சினையால் முடி கொட்டினால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது சியானின் ஹேர் லுக்.
வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த காஷ்மோரா கார்த்தி.மொட்டை மண்டை, நீளமான தாடி, முகத்தில் டாட்டூவுடன் டெரர் காட்டினார் ராஜ் நாயக்.