Kim Kardashian : இது ரொம்ப ஓவர்... ஒரு சீஸ் கேக் சாப்பிட 9 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்த பிரபலம்
கொஞ்சம் ஓவராதான் போறோமோ ? போவோம் என்னா பண்ணிடுவானுங்க என்பது போல தான் சில நேரங்களில் பிரபலங்களின் நடவடிக்கைகள் அமைகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்த மாதிரியான ஒரு செயலைதான் ஹாலிவுட் பிரபல மாடல் கிம் கர்தாஷியனின் செயல் தற்போது பேசுபொருளாகியுள்ளது
மாடல் , தொழிலதிபர் , நடிகை என பல முகங்களைக் கொண்ட கிம் கர்தஷியன் அமெரிக்காவின் அதிகம் பேசப்படும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் மட்டுமில்லாமல் இவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கர்தஷியன் ஃபேமிலி என பிரபலமாக அறியப்படுபவர்கள்.
கிம் கர்தஷியன் உலகளவில் பிரபலமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் அவரது படுக்கை அறை வீடியோ ஒன்று வெளியாகி காட்டுத்தீப் போல் பரவலானது.
கிம் கர்தஷியன் கர்ப்பமாக இருந்தபோது அவருக்கு சீஸ் கேக் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது.
பொதுவாக தனக்கு சீஸ் கேக் அவ்வளவு பிடிக்காது என்றாலும் பாரிஸில் லா கோஸ்தே என்கிற உணவு விடுதியில் கிடைக்கக்கூடிய சீஸ் கேக் அவருக்கும் பிடித்தமானதாம்
கொஞ்சமும் யோசிக்காமல் தனது பிரைவேட் ஜெட்டை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து பிரான்ஸூக்கு பறந்துள்ளார் கிம். ஆனால் அவர் சென்றபோது அந்த உணவு விடுதியில் சீஸ் கேக் தீர்ந்துவிட்டதாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -