Keerthy Suresh: 25 நாட்களைக் கடந்த தசரா..படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ந்த கீர்த்தி!
புதுமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெல்லாவின் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் தசரா.
நானி படத்தின் நாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தின் கதை எழுதப்பட்டிருந்ததால், ரசிகர்களுக்கு இப்படத்தினை பிடித்துவிட்டது.
தசரா படத்தில் இடம் பெற்றிருந்த “மைனரு வேட்டிக்கட்டி..” பாடல் ஹிட் ஆனது.
கீர்த்தியின் வெண்ணிலா கதாப்பாத்திரமும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
தசரா திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
இதையொட்டி, நடிகை கீர்த்தி தசரா படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நானி மற்றும் கீர்த்தி கரி படிந்த இடங்களில் நடிக்க வேண்டி இருந்தது. அந்த புகைப்படத்தை கீர்த்தி பதிவிட்டுள்ளார்.
படத்தின் நாயகன் நானியுடன் மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கும் கீர்த்தி.
கீர்த்தி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.