பிரியா பவானி, வாணி போஜன் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்த மேகா ஷெட்டி!

தொலைக்காட்சியில் இருந்து, கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது. மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன் அனுபவம் இல்லாமலேயே இவர் இந்த இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மங்களூரில் பிறந்த இவர் முதன்முதலில் வெற்றிகரமான கன்னட சீரியல் ‘ஜோதே ஜோதேயலி’ மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நடிப்புத் துறைக்குள் அறிமுகமானதில் இருந்தே, மேகா ஏழு கன்னட படங்களில் நடித்துள்ளார். 'டிரிபிள் ரைடிங்', 'தில்பசந்த்' மற்றும் 'கைவா' ஆகிய படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அவரது அடுத்த படமான 'ஆஃப்டர் ஆபரேஷன் லண்டன் கஃபே' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, அதே நேரத்தில் 'கிராமாயணா' மற்றும் 'சீட்டா' படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

கன்னட சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடிக்க இருக்கிறார் மேகா. இந்தப் படங்களில் அவர் தனது நடிப்புத் திறனை மட்டுமல்லாமல் நடனத் திறமையையும் வெளிப்படுத்த இருக்கிறார். தென்னிந்திய சினிமாவிலும் தனது முத்திரையை பதிக்கும் பொருட்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசுவதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார் மேகா.
தனது நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தும் விதமாக சவால் நிறைந்த கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறார் மேகா. சினேகா, நதியா போன்ற நடிகைகள் தங்களது அழகு, திறமை போன்ற விஷயங்களால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே தானும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைக்கிறார் மேகா.
ஒரேவிதமான கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடிக்க விரும்பவில்லை. எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.
தமிழில் தற்போது வாய்ப்பு தேடி வரும், மேகா ஷெட்டி, தமிழில் சீரியல் நடிகையாக இருந்து கதாநாயகிகளாக மாறிய, ப்ரியா பவானி ஷங்கர், மற்றும் வாணி போஜன் போல் நிலையான இடத்தை பிடிப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -