Kamal In USA : அமெரிக்காவில் ஆண்டவர்.. புது தோற்றத்தில் பிரபாஸ்..இணையத்தை சூழ்ந்த ப்ராஜெக்ட் கே அப்டேட்ஸ்!
பான் இந்தியா படமாக உருவாகும் ‘ப்ராஜெக்ட் கே’-வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, சான் டியாகோ காமிக்-கான் விழாவில் திரையிடப்பட உள்ளது.
பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
அறிவியல் சார்ந்த புனை கதையை கொண்ட இப்படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
கமல் ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்ற தகவல் முன்னதாக வெளியாகியது. இதன் படப்பிடிப்பு தளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் இவர் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.
அதைதொடர்ந்து கலிஃபோர்னியாவில் நடைபெறும் சான் டியாகோ காமிக்-கான் விழாவில் ‘புராஜெக்ட்-கே’ படத்தின் டீசர், முழு டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதற்காக நடிகர் கமல் ஹாசன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அமெரிக்காவில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக தீபிகா படுகோன் பிறந்தநாள் அன்று அவரின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.