Nayakan Re Release : 36 ஆண்டுகளை கடந்த மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் நாயகன்!
மணிரத்னம் இயக்கத்தில் 1987 ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் 175 நாட்களுக்கு திரையரங்குகளில் ஓடியது
ஆங்கிலத்தில் வெளியான காட்பாதர் திரைப்படத்தின் தாக்கத்தில் உருவான நாயகன் திரைப்படம் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மல் ஹாசன் ,சரண்யா, டெல்லி கணேஷ் நிழல்கள் ரவி மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
சிறந்த நடிகருக்கான விருது கமலிற்கும் , சிறந்த கேமராமேனுக்கான விருது பி சி ஸ்ரீராமிற்கும் ,சிறந்த கலை இயக்கத்திற்கான விருது தோட்டா தரணிக்கும் வழங்கப்பட்டது. ஆக, இப்படம் 3 தேசிய விருதுகளை குவித்தது.
நாயகன் திரைப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ரீ ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 150 திரையரங்கங்களிலும் கேரளாவில் 50 திரையரங்கங்களிலும் கர்நாடகத்தில் 40 திரையரங்கங்களிலும் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.