Kamal Haasan Lineups : பேக் டூ பேக் படங்களில் நடித்து வரும் கமல் ஹாசனின் சூப்பர் லைன் அப்ஸ்!
கமல் ஹாசனுக்கு விக்ரம் படம் மாஸான கம்-பேக் படமாக அமைந்தது. விக்ரம் படத்தை தொடர்ந்து பல வெறித்தனமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் இந்தியன் 2 . இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியன் 2 வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி வெளியாக போவதாக கூறப்படுகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கும் தக் லைப் படத்தை தயாரித்தும் நடித்தும் வருகிறார் கமல்ஹாசன். இந்த படத்தின் சூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. சிம்பு, நாசர், ஜோஜு ஜார்ஜ், திரிஷா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பான் இந்திய ஸ்டண்ட் மாஸ்டர்களாக வலம் வருபவர்கள் அன்பு - அறிவு. இவர்கள் நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. KH 237 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படைப்பையும் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -