Kajal Aggarwal : ‘சினிமாவை விட்டு விலக மாட்டேன்..’ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல்!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காஜல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தொழிலதிபர் கெளதம் கிட்சுலுவை திருமணம் செய்துகொண்டார் காஜல். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நீல் கிட்சுலு என பெயர் சூட்டினர்
திருமணம், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட காஜல் குட்டி பிரேக்கிற்கு பின் இந்தியன் 2விலும் பாலாய்யாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இதுவே இவரது கடைசி படமாக இருக்கும் என்ற தகவல் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் பரவி வந்தது.
இந்நிலையில் இதனை மறுத்துள்ளார் காஜல் அகர்வால். ‘சினிமாவில் இருந்து விலக போவதாக வெளியான தகவல் அனைத்தும் வதந்தி. இதுபோல் நான் எங்கும் சொல்லவில்லை. குழந்தை பிறந்த பிறகு அவனை வளர்க்கும் பணிகளில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். குடும்பத்திற்கும் அதிக நேரம் ஒதுக்குகிறேன்.’என பேசியுள்ளார் காஜல்.
மேலும் பேசிய அவர், “என்னை பொறுத்தவரை வேலை வேறு. குடும்பம் வேறு. இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போதைக்கு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். புதிய கதையை கேட்டு வருகின்றேன்”என கூறினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -