kajal Aggarwal: ”கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு” காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள்
இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு திரைத்துறையில் துணை நடிகையாக கால் பதித்தார்.
துணை நடிகையாக இவரின் முதல் படம் ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், அமிதாப் பச்சன் நடித்த கியூன்! ஹோ கயா நா படமாகும்.
காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்த முதல் படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படமாகும்.
தமிழில் பிரபல நடிகரான விஜய்யுடன் ஜோடியாக நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படமானது. இதுவரை 50 மேற்ப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.
இரண்டு வருடத்துக்கு முன்னர் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.சமிபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இன்று 38 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்த பின்னும் தொடந்து நடித்து வந்த இவர் தற்போது குழந்தையுடன் முழு அன்பை செலுத்த முடியவில்லை என்பதால் தற்போது சினிமாவில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.