தேவதை வம்சம் நீயோ... 46 வயதானாலும் ஜோதிகா அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் 90-ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஜோதிகா. முதல் படத்திலேயே அஜித்துக்கு காதலியாக கேமியோ ரோலில் நடித்து பிரபலமானார்.
வாலி படத்தில் கேமியோ ரோலில் நடித்த, இந்த பெண் யார் என இயக்குனர்கள் முதல் ரசிகர்கள் வரை தேட துவங்கிய போது தான் ஜோ, நடிகை நக்மாவின் தங்கை என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோவுக்கு, விஜய்யுடன் நடித்த குஷி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் அறிமுகமான 2 வருடத்தில் முன்னணி நடிகையாக மாறிய ஜோ, அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அணைத்து டாப் ஹீரோக்களுடனும் இணைந்து நடித்தார்.
முன்னணி நடிகையாக நடித்து கொண்டிருக்கும் போது தான் சூர்யா மீது காதல் வயப்பட்டு, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்.
சூர்யா வீட்டிலும், ஆரம்பத்தில் ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்புகள் எழுந்தாலும்... பின்னர் சூர்யாவின் பிடிவாதத்திற்காக ஒப்பு கொண்டதாக கூறப்பட்டது.
சூர்யாவை திருமணம் செய்து கொள்ள, நடிகர் சிவகுமார் ஜோதிகாவுக்கு பல கண்டீஷன் போட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே ஜோ திருமணம் முடிந்த கையேடு சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது 2 குழந்தைகள் மற்றும் கணவர் என சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில்... ஜோ மீண்டும் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் கோலிவுட் படங்களில் நடித்த ஜோ, இப்போது பாலிவுட் சென்று அங்கேயே செட்டில் ஆக முடிவு செய்துவிட்டார் போல, இவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள டப்பா கார்டெல் வெப் தொடரின் புரமோஷனில் இவர் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது. கிரே கலர் ஸ்டைலிஷ் உடையில், 46 வயதிலும் தேவதை போல இருக்கிறார். தற்போது இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.