Cinema News : அஞ்சலி, கிழக்கு வாசல் படம் வெளியாகி 34 வருடங்களை நிறைவு செய்கிறது!
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.
பார்த்திபன் தயாரித்து நடித்துள்ள படம் டீன்ஸ். பள்ளி சிறுவர், சிறுமியரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படம் வெளியாகி இன்றுடன் 34 வருடங்களை நிறைவு செய்கிறது. இது சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என மூன்று தேசிய விருதுகள் பெற்றுள்ளது.
ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் கிழக்கு வாசல். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படம் சென்னையில் 150 நாட்களை கடந்து தியேட்டரில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் - தேவயானி நடுத்த காதல் கோட்டை படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 28 ஆண்டுள் நிறைவடைகிறது.
1974 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த நேற்று இன்று நாளை படத்தை நீலகண்டன் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 50 வருடங்களை நிறைவு செய்கிறது.