Jayam Ravi : படு பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி... லைன் அப்பில் காத்திருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ!
பொன்னியின் செல்வன், இறைவன், சைரன் படங்களை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்த வகையில் அவரின் லைன் அப்பில் இருக்கும் படங்களின் லிஸ்ட் பற்றி பார்க்கலாம்.
பிரதர் - எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, சரண்யா, விடிவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகியுள்ளது.
ஜீனி - அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஒரு ஃபேண்டசி படத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் ஜீனி. இதில் கிருத்தி ஷெட்டி , கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு கிராமிய கதையை மையமாக வைத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
தனி ஒருவன் 2 : 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற தனி ஒருவன் திரைப்படத்தை தொடர்ந்து ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.
காதலிக்க நேரமில்லை - கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் லீட் ரோலில் நடித்துள்ள ரொமான்டிக் காதல் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -