Jawan New Poster : 'தி டீலர் ஆப் டெத்' புல்லரிக்க வைக்கும் விஜய் சேதுபதியின் ஜவான் லுக்!
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து கமர்ஷியல் படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் அட்லீ.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் தற்போது, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் படம்தான் ஜவான்.
அண்மையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான ஜவான் ப்ரிவ்யூ 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்தது.
பிரமாண்ட பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் ஜவான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தற்போது, இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ‘தி டீலர் ஆப் டெத்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இப்போஸ்டர் வெளியானதில் இருந்து விஜய் சேபதியின் ரசிகர்கள் இதனை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -